உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும் எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் 11 இடை மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.

சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு ​எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Related posts

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது