(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(17) மாலை 6.10 மணிவரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் 960 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது 413 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் 538 பேர் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.