உள்நாடு

உயர் தரப்பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளின் போது கணிப்பான்களை (calculator) பயன்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது

இதற்கமைய நிழற்படுத்தப்படாத சாதாரண கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கணக்கீடு, பொறியியலுக்கான தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய நான்கு பிரிவுகளுக்கு மாத்திரம் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

எனினும் தொலைபேசி கணிப்பான், மின்னணு கணிப்பான் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர்

அங்கொட லொக்காவின் ‘கழுகு’ கைது

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி