உலகம்

நோபாளத்தில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோபாளத்தில் முதலாவது மரணம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக நேபாளத்தின் சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த 6 ஆம் திகதி, குழந்தை ஒன்றை பிரசவித்து காத்மண்டு வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண், மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேபாளத்தில் இதுவரை 281 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குஜராத்திலும் நில அதிர்வு

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை