(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று(16) இரவு 8 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை(18) காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், ஏனைய 23 மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை வழமையான நடைமுறையில், ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கடந்த 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் பணிகள் இன்று(16) இரவு 08 மணிக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.