உள்நாடு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை தமது சேவைகள் வழங்கப்படும் எனவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்தரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல். வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஒருநாள் சேவை, மீள் அறிவித்தல் வரை வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

Image may contain: text

No photo description available.

Related posts

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு

எந்த புதிய திரிபினையும் இந்நாட்டு சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்த முடியும்