உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மி.மீற்றர் வரை பலத்த மழை

(UTV|கொழும்பு)- வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் வளிமண்டள தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோ மீற்றர்வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும், இதன்போது கடல் சற்று கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

ஊரடங்கினை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசுக்கு ஆர்வமில்லை

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றினால் இரத்து