உலகம்

கொரோனாவை ஒழித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு

(UTV|கொழும்பு)- உலகிலேயே முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது.

ஸ்லோவேனியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,465 ஆக பதிவாகியுள்ளதுடன், 103 பேர் இந்த வைரசினால் உயிரிழந்துள்ளனர்.

ஸ்லோவேனியாவின் இந்த அறிவிப்பு காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து அந்த நாட்டுக்கு செல்லும் யாரும் தனிப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள இந்த நாட்டின் மக்கள் தொகை 20 இலட்சம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.

ஈராக் பாராளுமன்றம் எதிர்ப்பாளர்களின் கைகளில் விழுந்தது

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை உயர்வு