உள்நாடு

பாராளுமன்ற செயலகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கை பாராளுமன்ற செயலகத்தின் பணிகள் கடந்த 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முழுமையாக ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 (COVID 19) தொற்றுநோய் பாராளுமன்ற வளாகத்துக்குள் பரவுவதைத் தடுப்பதற்கான சகல சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பாராளுமன்ற வளாகத்திற்குள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தினால் சகல பணியாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற பணியாளர்கள் தவிர வேறு எவரும் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது.

Related posts

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு

விமானப்படையின் தளபதிக்கு கொரோனா

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்