(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கா விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று, இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவு நோக்கி பயணமாகியுள்ளது.
அங்குள்ள 288 பயணிகள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.