உலகம்

சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

(UTV | கொழும்பு) – சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளதால், பொருளாதார தடையை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் விதிக்க வேண்டுமென செனட் சபையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைகாலமாக அமெரிக்கா வைரஸ் பரவலுக்கு சீனாவை காரணமென குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

சீனாவிடம் இருந்து பாரிய தொகையை இழப்பீடாக கோரவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

விளாடிமிர் புதின் 2036 வரை ரஷ்ய ஜனாதிபதி பதவியில் நீடிக்க வாய்ப்பு

உலகில் முதன் முறையாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்