உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 3-வது இடத்தை பிடித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,899 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,32,243 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் நேற்று 107 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மொத்த உயிரிழப்புகள் 2,116 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மற்றைய நாடுகளை விடவும் ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறையிலுள்ள கடாபியின் மகனின் நிலை கவலைக்கிடம்!

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்

ஈரான் குலுங்கியது