உலகம்சூடான செய்திகள் 1

வுஹானில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

(UTV | கொவிட் 19) –சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 6 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நகரில் உள்ள 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும்  கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் 11 வார கால முடக்க நிலையின் பின்னர் ஏப்ரல் 8ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் அந்த நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட வில்லை.

கடந்த வார இறுதியில் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த மக்களுக்கும் கொரோனா சோதனை செய்வது பற்றி திட்டமிடப்படுகிறது.

Related posts

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை-இடர் முகாமைத்துவ பிரிவினர்