உள்நாடுசூடான செய்திகள் 1

மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

(UTV|கொழும்பு) – நிதி தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒழித்தல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பான மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை நீக்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சாம்பல் நிறப்பட்டியல் என பொதுவாக அடையாளப்படுத்தப்படுகின்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் ஆவணத்தில் நிதிதூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் ஆகிய உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நியாயாதிக்க பிரதேசமாக அச் செயலணி மூலம் இலங்கை அட்டவணைப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உபாய ரீதியான குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கைக்கென கால வரையறை செய்யப்பட்ட கூடிய நடவடிக்கைத் திட்டமொன்று வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள், நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் நடவடிக்கைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திறன் மிக்கதும் உறுதியானதுமான தொடரான நடவடிக்கைகளை எடுத்திருந்ததுடன் குறித்த பட்டியிலிலிருந்து 2019 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பாரிஸ் நகரில் நடைபெற்ற அமர்வில் சாம்பல் நிறப்பட்டியல் எனவும் அறியப்படுகின்ற இலங்கை நீக்கப்பட்டது.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு

புதிய பிரதமர் தலைமையிலான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது