உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு, உரிய அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிந்த போதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காரணத்தினால் குறித்த அந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட காரணத்தினாலேயே, மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீனாவிடம் இருந்து கடன்

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு