வகைப்படுத்தப்படாத

இரகசிய உடன்படிக்கை இல்லை – சந்திம வீரக்கொடி

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லையென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளதாக மசகு எண்ணெய் தொழிற்துறை சார் ஒன்றிணைந்த சங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மசகு எண்ணெய் சார் பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல, எதிர்வரும் 28 ஆம் திகதி குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படும்பட்சத்தில் மசகு எண்ணெய் விநியோகிக்கும் செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாக அசோக ரன்வல இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

Showers & winds to enhance over south-western areas

Power disruptions likely in several areas

அதிவேக வீதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை