உலகம்

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – சீனாவில் உள்ள ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா சுமார் மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் பாவனைக்காக சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 பார்வையாளர்களையே குறித்த பூங்காவிற்கு உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த பூங்காவில் 80ஆயிரம் பேர் வருகை தருவதோடு 12,000 ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

பூங்காவுக்கு வருகை தருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன், உடல் வெப்பநிலை அளவிடப்படும் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொவிட்-19 பரவலுக்கு எதிரான விதிமுறைகள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக தோன்றிய வுஹானில் புதிதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்றாக கொரோனா

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது

இத்தாலியில் முடக்க நிலை கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை