உள்நாடுசூடான செய்திகள் 1

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக ஆணைக்குழு சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் .

பாராளுமன்றக் கலைப்பு மற்றும் ஜூன் 20 பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தல் நடத்தும் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது