(UTV|கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரமளவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று(09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களின் உதவிகளை பெற்று சகல பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன்பின்னர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நான்கு நாட்களுக்குப்பின்னர் ஆசிரியரகள் அதிபர்களை அழைத்து பாடங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முதல் கட்டத்தில் கீழ், ஆரம்ப வகுப்பு மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.