உலகம்

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக குவைத் நாட்டில் 20 நாள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை(10) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

குவைத் நாட்டில் இதுவரை 7,623 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வைரஸ் தொற்றுக்கு 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமூக பரவலாக மாறுவதற்கு முன் நாடு முழுவதும் நாளை முதல் மே. 30 வரை 20 நாள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆப்கானில் பெண்களுக்கு தொடரும் தடை

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

சர்ச்சையாக இருந்த ஜாக் மா பொது நிகழ்ச்சியில்