உள்நாடு

சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த மார்ச் 2ஆம் திகதி ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வௌியிட்ட பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரனவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற போதிலும், ஜூன் மாதம் 20 ஆம் திகதியானது 3 மாதங்களை கடந்த திகதியாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Related posts

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து

ராஜித சேனாரத்ன கைது

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு