(UTV | கொழும்பு) – திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 1500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 426 பஸ்கள் வைத்திய ஊழியர்களின் நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் ஏதேனும் நிறுவனங்கள் கோரினால், ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கிணங்க ஊழியர்களை கொண்டு செல்ல பஸ்களை வழங்கவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.