(UDHAYAM, COLOMBO) – மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஊடகப் பிரதானிகளை சந்தித்த அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
தற்போது 60 சதவீதமான குடியேற்றங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னைய ஆணைக்குழுக்களது அறிக்கைகளின் அடிப்படையில், காணாமல் போனோரது அலுவலகம் உருவாக்கப்பட்டு செயற்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பான செயற்பாடுகள் அடுத்துவரும் ஒரு மாதத்தில் நிறைவுசெய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5 பில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் நிலையான தன்மையுடன் சரியான பாதையில் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.