(UTV | கொழும்பு) –தற்போது நிலவும் கொரோனாவைரஸ் தொற்றுநிலை காரணமாக, நாட்டு மக்கள் மத்தியில் சுகாதார இடர் தோன்றியுள்ளமை மாத்திரமன்றி, நீண்ட கால அடிப்படையில் உணவு பாதுகாப்புக்கும் இடராக அமைந்துவிடக்கூடிய சூழல் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் எழக்கூடிய இவ்வாறான இடர் நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னேற்பாடாக செயலாற்றும் வகையில் உணவு தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான மூலோபாயங்கள், புத்தாக்கத்துக்கு முன்னுரிமையளிப்பு, பின்பற்றல் போன்றவற்றை தொடர்வதனூடாக உற்பத்தித்திறன் மற்றும் நிலைபேறாண்மையை கொண்டிருக்க முடியும்.
SLIITஇன் BSc (Hons) in Biotechnology கற்கையினூடாக மாணவர்களுக்கு உயிரியல் விஞ்ஞானத்துறையில் பட்டத்தை தொடரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இன்றைய சவால்கள் நிறைந்த சூழலில், நவீன உயிரியல் தொழில்நுட்ப செயற்பாடுகள் பற்றி மாணவர்கள் அறிந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், விவசாயச் செய்கை தொடர்பில் தமது பிரயோக நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான அடிப்படையிலான தொழிற்துறையாக உயிரியல் தொழில்நுட்பம் இனங்காணப்பட்டுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குரிய எந்திரமாகவும் கருதப்படுகின்றது. புதிய தொழில்நுட்பங்களினூடாக விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்தத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள BSc (Hons) in Biotechnology கற்கையினூடாக, மாணவர்களுக்கு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பது, கற்றல்களை தொடர்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.