வணிகம்

ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford

(UTV | கொழும்பு) – இலங்கையில் ஹொண்டாவின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors, தனது துணை நிறுவனமான Inventive Polymers Lanka (Pvt) Ltd உடன் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தேசிய முயற்சித் திட்டத்தை ஆதரிப்பதற்காக முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கும் பொருட்டு  இணைந்துள்ளது.

Stafford Group, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் முயற்சிகளுடன், தனது சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் நன்கு பொருந்துகின்றது என்பதில் நிலையுறுதியுடைய தொலைநோக்குப் பார்வை கொண்ட நன்கு மதிக்கப்படும் உள்நாட்டு நிறுவனமாகும். முகக் கவசங்களின் அவசியம் சுகாதாரத் துறையின் முன்னின்று பணியாற்றுவோருக்கும்,  பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இந் நேரத்தின் முக்கிய தேவையாகும்.

IPL என்றறியப்படும் Inventive polymers Lanka (Pvt) Ltd, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் பொலிமர் அடிப்படையிலான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும். பாதுகாப்பு முகக் கவசத்தின் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு ஆகியன ஈPள் இனால் மேற்கொள்ளப்பட்டதுடன், ‘ IPLமுகக் கவசத்துக்கான’ கேள்வி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து 500 முகக் கவசங்களை பொதுச் சுகாதார பரிசோதர்களின் சங்கத்துக்கும், 100ஐ ஐ.டி.எச். வைத்தியசாலைக்கும், 50 முகக் கவசங்களை மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்துக்கும், மேலும் சிலவற்றை சில பொலிஸ் நிலையங்களுக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

நன்கொடை அளிக்கப்பட்ட முகக் கவசங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்கள் என்பதுடன், அவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தர நியமங்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிபுகக்கூடிய கவசமானது இலகு ரக தலைப்பட்டியைக் கொண்டுள்ளது. இது நெற்றியில் பொருந்தும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஒளிபுகக்கூடிய முன்பக்கமானது பொலிகார்பனேட்டினால் தயாரிக்கப்படுகிறது. இது தூசு மற்றும் மூடுபனி ஆகியவற்றை தாக்குப் பிடிக்கக்கூடியது. சுத்தம் செய்வது இலகுவானது என்பதுடன் மற்றும் நீடித்த பாவனைக்குகந்தது. எனவே, இது முன் களத்தில் பணிபுரிவோர் தங்கள் பணிகளில் எளிதாக ஈடுபட உதவும்.

“நீண்ட காலத்தில், இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய வணிக நிறுவனமாக மாற Stafford Group எதிர்பார்க்கின்றது. அந்த வகையில், இது நீண்ட கால கூட்டாண்மை நிறுவன தொலைநோக்கு பார்வைக்கு இணைவான பல சமூக பொறுப்புணர்வு முயற்சிகளில் ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள கூட்டாண்மைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்த முடிந்த ஒரு வைரஸுடன் இலங்கை போரிட்டு வருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, இது ஒரு பொறுப்பான கூட்டாண்மை தலைவர் என்ற வகையில், நம் தேசத்திற்கு திருப்பி அளித்த ஒரு தருணம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என Stafford Motor Company இன், முகாமைத்துவ பணிப்பாளர், Dr.Kalinga Kaluperuma தெரிவித்தார்.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட, அது கண்கள், மூக்கு அல்லது வாயுடன் தொடர்புபட வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வெளியாகும் நீர்த்துளிகள் (பேசுவது, இருமல் அல்லது தும்மல் வழியாக), மற்றொரு நபரின் முகத்தில் படும்போது இது ஏற்படுகின்றது. தொற்று நீர்த்துளிகள் பட்ட மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் ஒருவர் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவது தொற்று ஏற்படுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான முக்கிய வழி, முகத்தின் இந்த பகுதிகளை மூடிமறைப்பதாகும், அதனால்தான் முகக் கவசங்களை முன் களத்திலுள்ள தொழில்சார் நிபுணர்கள் / கூட்டாண்மை நிறுவனங்களின் ஊழியர்களுக்கான முக்கிய சுய பாதுகாப்பு உபகரணங்களாக கருத முடியும்.

இந் நிறுவனம் முகக் கவசத்தை ரூ. 750.00 என்ற நியாயமான விலையில் விற்பனை செய்வதுடன், பல இடங்களில் இதனைக் கொள்வனவு செய்ய முடியும் அல்லது உங்கள் வீட்டு வாசலுக்கே விநியோகிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எகிறும் மரக்கறிகளின் விலைகள்

சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு அரசினால் ஓய்வூதியம்

வெளிநாடுகளிலுள்ளோர் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக்கணக்கு