(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூன்றாவது மிகபெரிய நகரமான ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் அமைந்துள்ள உயர்ந்த கோபுரத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.
இந்த தீவிபத்தில் குடியிருப்பில் இருந்த 300 குடும்பங்களை பத்திரமாக மீட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தப்பின. எனினும் இந்த விபத்தில் 9 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.