கிசு கிசு

உலக புகழ்பெற்ற தொழிலதிபரால் வெறும் 100 மணி நேரத்துக்குள் கொரோனாவை எரிக்கும் திட்டம்

(UTV | கொவிட் 19) – வெறும் 100 மணி நேரத்துக்குள் கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் அமெரிக்க அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் வுஹானில் தோன்றி தற்போது உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும் அவை பாவனைக்கு வருவதற்கு ஓராண்டுகள் எடுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்நிலையில், வங்காளதேசத்தை சேர்ந்த மூசா பின் ஷம்ஷர் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொரோனாவை ஆபத்தான ஆயுதங்களை விட பயங்கரமானதாக கருதி அதனை அழிக்க உலக விஞ்ஞானிகள் குறிப்பாக நாசாவின் பிரபல விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித நாகரிகம் முழுவதுமாக அழிந்துவிடும்.

அணு அல்லது யுரேனியம் சாம்பலை செல்பார் சாம்பலுடன் சேர்த்து தடிமனான புகையை நாசாவால் உருவாக்க முடியும். அதில் மனித உடல்நல கேடுகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் வேறு சில கூறுகளைச் சேர்க்கலாம்.

அதன் பின்னர் அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் மூலம் அதிகபட்சமாக 10,000 அடி உயரத்தில் இருந்து இந்த புகையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

கொரோனா நோயாளிகளை எவ்வாறு குணப்படுத்தப்படுவது என்பது குறித்து உலக தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே எனது ஆலோசனையை கேட்டு நடந்தால் உலக நாடுகள் அழிவில் இருந்து தப்பலாம்.

உங்களால் (டிரம்ப்) மட்டுமே இந்த உலகத்தையும் மனிதநேயத்தையும் காப்பாற்ற ஒரு கடவுளைப் போல செயல்பட முடியும். எனது கடிதத்துக்கு விரைவாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஸ்பைரட்மேனாக மாறிய வங்கி அதிகாரி… எதற்காக தெரியுமா?

15 லட்சம் வீடியோக்களை நீக்கியது facebook…

ரணிலை சந்தித்த ஹர்ஷ, கபீர் – நீண்ட நேரம் இரகசிய பேச்சு