(UTV | கொழும்பு) – காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் 08 கடைகளுக்கு சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி பொலிஸார், காலி நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பிரதேவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இத்தீ விபத்தின்போது, எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.