உள்நாடு

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

(UTV|கொழும்பு) – பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் தெற்கு,. வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் எனவும், முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

Related posts

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

கெப் வண்டி மோதி பஸ் விபத்து- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !