உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று(04) அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 21 மாவட்டங்களில் மீண்டும் இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதிவரை இதேபோன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு மீண்டும் அன்றைய இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஊரடங்கு அமுலாகியுள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1,2 உடையவர்கள் மாத்திரம் இன்றைய தினம் வெளியில் செல்ல முடியும்.

Related posts

அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்

அனைத்து மாவட்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய முப்படையினர்