உள்நாடு

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் நாளை(04) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு, மீண்டும் நாளை(04) இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது

இவ்வாறு மே மாதம் 6 ஆம் திகதிவரை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம்!

வெலிகமயில் கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்