உள்நாடு

முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகள் திறக்கப்படும் போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது எனவும் நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அல்லது பாடத்திட்டத்தின் அடிப்படையில் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் எனவும் தெரிவித்த அவர், இறுதி முடிவு குறித்து கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டார்

Related posts

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

சஜித் அணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.