உலகம்

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு

(UTV|கொழும்பு)- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மே 3 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளபடி அத்தியாவசிய தேவைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள், உணவுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் சிறு உணவகங்கள் உட்பட விருந்தோம்பல் சேவைகள், திரையரங்குகள், விளையாட்டு வளாகங்கள் போன்ற பெரிய பொதுக்கூட்டங்களும் மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சமூக, அரசியல், கலாசாரக் கூட்டங்கள், மத வழிபாட்டுத்தலங்களில் பிரவேசிப்பதற்கான அனுமதியையும் அரசு மறுத்துள்ளது.

Related posts

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கின்றது

இந்தியாவுக்கும் இன்று புதிய ஜனாதிபதி

கொரோனா: அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம்