உள்நாடுவணிகம்

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு)- உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களின் விற்பனை முகவருக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்ய்பபடும் என தேசிய உரச் செயலகம் அறிவித்துள்ளது.

நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் 50 கிலோகிராம் மூடைக்கான விலை 1000 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கலப்பு உரம் ஒரு மூடை 1150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக உரத்தை விற்பனை செய்வோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 0113 40 39 31 அல்லது 0113 40 37 94 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசில் குளிர்காய்கிறது

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரு நாள் செயலமர்வு