வணிகம்

மருந்தக தொழிலாளர்களின் அயராத சேவையைப் பாராட்டும் SLCPI

(UTV|கொழும்பு )- இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களையும் அங்கீகரிக்கும் அதேவேளை, COVID-19 தொற்றுநோய் பரவும் வேளையில், அமுலாக்கப்பட்ட ஊரடங்கின் போது அவர்களின் திட்டமிடப்படாத சேவைகளுக்காகவும், அத்துடன் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்தகங்களை உள்ளடக்கிய உள்ளுர் மருந்து தொழிலாளர்கள் ஆகியோர் மேற்கொண்ட விதிவிலக்கான பணிகளுக்காக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சம்மேளனம் வெளியிட்ட செய்தியில், COVID-19 தொற்று நோய்க்கு இலங்கை சார்பில் பதிலளிக்கும் வகையில் SLCPI, மருந்தகங்கள் மற்றும் மருந்தாளர்களுடன் விநியோக சங்கிலி மற்றும் விநியோக நிறுவனங்களுடன் இணைந்து, விநியோக சாரதிகள் ஆகியோர் அனைவரின் மருந்துகள் மற்றும் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த அயராது உழைக்கிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

‘உலகளாவிய ரீதியிலுள்ள தொற்றுநோய் தொடர்பான நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்துவது குறித்து மறுமதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளன. எப்போதும் மாற்றமடைந்துவரும் அரசாங்க முன்னுரிமைகளால் மோசமடைந்து வரும் நிலையற்ற சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுபுறம், உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற இந்த கொள்ளை நோய்க்கு ஒரு தீர்வைக் கண்டறிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கடிகார முள்ளைப் போல சுற்றி வேலை செய்வதை நாம் அவதானிக்கிறோம்.’ என SLCPIஇன் தலைவர் கஸ்தூரி செல்லராஜ் தெரிவித்தார்.

‘மருந்தகக் குழுக்கள் நாட்டின் சுகாதார அமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும், கடந்த வாரங்களில் ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகள், பிற தயாரிப்புக்கள், ஆலோசனைகள் மற்றும் உறுதியளிப்பு ஆகியவற்றின் தேவை என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

‘தற்போது, அவர்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர், சுகாதார சேவையின் முன்வரிசையில் ஒரு குழுவாக பணியாற்றுகிறார்கள், சமூகங்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்கின்றார்கள். இதனால் இந்த துறையின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும்.’ என அவர் சுட்டிக்காட்டினார்.

அயராது உழைக்கும் மருந்தகங்களுக்கு உதவுமாறு அவர் பொதுமக்களிடம் பின்வருமாறு
வேண்டுகோள் விடுத்துள்ளார்:

  • வறண்ட, தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற COVID-19 நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருந்தகங்களுக்குச் செல்வதை தவிருங்கள்.
  • பொறுமையாக இருங்கள்: அனைத்து மருந்தகங்களும் மிகுந்த அழுத்தத்தில் உள்ளன, உங்களுக்கு தேவையானதைப் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதற்காக கடிகார முள்ளைப் போல் சுற்றி வேலை செய்கிறார்கள்.
  • மருந்துகளை இயல்பாக ஓடர் செய்யுங்கள்: மருந்துகளை சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. கூடுதல் மருந்துகளை ஓடர் செய்வதும், உங்களுக்குத் தேனையானதை விட அதிகமான மருந்துகளை வாங்குவதும் மருந்து விநியோக சங்கிலிக்கு விளைவிக்கும் வலுவான இடையூறு வியடமாகும்.

இறுதியாக, மருந்து தொழில்துறையில் கடமையாற்றுபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், SLCPI கூறுகையில்: 'இந்த கடினமான காலங்களில் நீங்கள் முன்வரிசையில் ஒருபகுதியாக இருக்குறீர்கள், அதற்காக நாங்கள் உங்களுக்க நன்றி செலுத்துகிறோம்.’

Related posts

பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு