உள்நாடு

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) -நாவலபிடிய நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக இவர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேன-நாவலபிடிய வீதியில் உள்ள ஒரு விடுதியொன்றிற்குள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (30) கைது செய்யப்பட்டிருந்தனர்

இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்