உள்நாடு

தேசிய கண் மருத்துவமனையின் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் வரை தேசிய கண் மருத்துவமனையில் திடீர் விபத்து பிரிவு மற்றும் அவசர கண்சிகிச்சை பிரிவு மாத்திரமே மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.சீ. குமாரதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய கண் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு, 24 மணிநேரம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 0113 31 86 78 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி கண் நோய்கள் தொடர்பான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கண் மருத்துவமனையானது, கொரோனா இடர்வலயமான கொழும்பில் அமைந்துள்ளமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு!

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்