உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவி வரும் நெருக்கடியை அரசியல் அமைப்பு ஊடாக தீர்ப்பதற்கும் அரசாங்க செலவுகளுக்கான அங்கீகாரத்தை வழங்கவும் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது அரசாங்க பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு சட்டரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் அங்கீகாரம் வழங்குவதற்கு பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

இதற்கமைய இலங்கை, அரசாங்க நிதி நடவடிக்கைகள் தொடர்பில் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து பொறுப்புடன் செயற்படும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியலமைப்பபை பாதுகாப்பதற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர 10 விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

கல்முனையில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!