(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பிரதமரால் தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவு தொடர்பில் விசேட விவாதம் ஒன்றை நடத்துமாறு மகிந்த அணியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரதமரின் கோரிக்கை அடிப்படையிலேயே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள சபாநாயகர், இதற்கான கோரிக்கை இன்னும் முன்வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.