உள்நாடு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிக்காத மாவட்டங்கள்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

இதன்படி, இலங்கையில் இதுவரை 22 மாவட்டங்களில் 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நான்கு மாவட்டங்களில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே கொரோனா வைரஸ் தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

தற்போது 481 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை

editor

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்