(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளதுள்ளதுடன் 7,747 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.