உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

(UTV | கொவிட் – 19) -கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம் அருகே 60 ஆம் தோட்டம்,  ஹெவலொக் லேன் பகுதிகளில் தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த 134 பேர் கொரோனா தொற்று குறித்த விஷேட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் ஏற்கனவே முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், புதிதாக  இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் அயல் வீட்டுபெண் ஒருவரும், குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவருக்கும் இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

இடியுடன் கூடிய மழை