உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 8 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் கடற்படையினர் எனவும் ஏனைய மூன்று பேரும் புனாணை மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான பிடியாணை மீள பெறப்பட்டது

editor