உள்நாடு

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து

(UTV | கொழும்பு) – கடற்படை வீரர்கள் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியொன்று  விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 05 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை(28) காலி – கொழும்பு பிரதான வீதியில், அம்பலாங்கொடை, ரந்தம்பை பிரதேசத்தில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் வண்டியானது, வீதியிலிருந்து விலகிச் சென்று மதிலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விடுமுறைக்குச் சென்ற பத்தேகம, காலி, கொக்கல பகுதிகளைச் சேர்ந்த 32 கடற்படை வீரர்கள் கொழும்பு நோக்கி புறப்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முதலீட்டு ஊக்குவிக்க கோட்டா-மஹிந்த-பசில் தலைமையில் குழு

ஒரு மில்லியனை எட்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

காதலனை தேடி, ஓட்டமாவடிக்கு வந்த இந்தியா பெண்!