உள்நாடு

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று கடற்படை வீரர்கள் மத்தியில்  பரவி வரும் நிலையில் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அவர்களே முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இன்னும், குறித்த தீர்மானத்தினால் தற்போதைய நிலைமையை முகாமை செய்ய முடியுமெனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே விடுமுறையில் சென்றவர்களை முகாம்களுக்கு அழைக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லுத்தினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 180க்கு மேற்பட்ட கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

நாட்டில் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!

‘கோட்டா நாடு திரும்ப இது நல்ல தருணம் அல்ல’ – ஜனாதிபதி