(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.