(UTV | கொவிட் 19) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை தாண்டியது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இதன்படி, தற்போதைய நிலவரப்படி,கொரோனாவால் உலக அளவில் 3,064,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 211,603 பேர் உயிரிழந்துள்ளதுடன், 922,389 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.