உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று(27) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதீடு ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்!

சஜித்- சந்திரிக்கா சந்திப்பு