உள்நாடுசூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால் காரணமாக பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு இப்போது தபாலில் அனுப்பிவைக்கப்படாது. எனினும் பாடசாலை அதிபர்களுக்கு பெறுபேறுகள் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு இணையம் ஊடாக பெறுபேகளை அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையில் 6,56 641 மாணவர்கள் தோற்றினார்கள்.

Related posts

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

editor

சுழற்சி முறையின் கீழ் இன்றும் மின்வெட்டு

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும்