(UTV|கொழும்பு)- இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்கள் இன்று(25) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -144 விமானத்தின் ஊடாக இன்று(25) பிற்பகல் 2.35 அளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.